திங்கள், 27 ஜனவரி 2025
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By siva
Last Updated : வியாழன், 25 பிப்ரவரி 2021 (07:21 IST)

ரோஹித் சர்மா, விராத் கோஹ்லி பொறுப்பான ஆட்டம்: முதல் நாளில் இந்தியாவின் ஸ்கோர்!

ரோஹித் சர்மா, விராத் கோஹ்லி பொறுப்பான ஆட்டம்: மு
இந்தியா மற்றும் இங்கிலாந்து கிரிக்கெட் அணிகளுக்கு இடையே அகமதாபாத்தில் நடைபெற்று வரும் மூன்றாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி நேற்றைய முதல் நாள் முடிவில் 3 விக்கெட்டுகளை இழந்து 99 ரன்கள் எடுத்துள்ளது 
 
நேற்று டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பேட்டிங் செய்து 112 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. அக்சர் படேல் அபாரமாக பந்து வீசி 6 விக்கெட்டுகளையும் அஷ்வின் 3 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்
 
இதனை அடுத்து இந்தியா தனது முதல் இன்னிங்சை தொடங்கியது தொடக்க ஆட்டக்காரரான கில் ஒருபக்கம் 11 ரன்களில் அவுட் ஆனாலும் இன்னொரு பக்கம் ரோகித் சர்மா நிதானமாக விளையாடினார். அவர் 9 பவுண்டரிகளுடன் 57 ரன்கள் அடித்து இன்னும் களத்தில் உள்ளார் 
 
அதன் பிறகு களமிறங்கிய புஜாரா ஏதும் எடுக்காமல் அவுட் ஆன போதிலும் விராத் கோலி போல் பொறுமையாக விளையாடி 27 ரன்கள் எடுத்துள்ளார். தற்போது விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மா ஆகியோரின் பொறுப்பான ஆட்டம் காரணமாக இந்திய அணி 3 விக்கெட்டுகளை இழந்து 99 ரன்கள் எடுத்துள்ளது என்பது குறிப்பிட இங்கிலாந்து
 
பந்துவீச்சை பொறுத்தவரை ஜாக் லீச் இரண்டு விக்கெட்டுகளையும் ஆர்ச்சர் ஒரு விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளார். தற்போது இந்திய அணி 13 ரன்கள் மட்டுமே பின்தங்கியுள்ள நிலையில் இன்றைய போட்டியில் என்ன நடக்கும் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்