1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: ஞாயிறு, 18 ஜூன் 2023 (10:34 IST)

உலகக்கோப்பைக்கு போகும் இரண்டு அணிகள் எது? மோதிக் கொள்ளும் 10 அணிகள்!

ICC Worldcup Qualifier
இந்த ஆண்டு 50 ஓவர் உலகக்கோப்பை போட்டிகள் இந்தியாவில் நடைபெற உள்ள நிலையில் இதற்கான தகுதி சுற்று போட்டிகள் இன்று தொடங்குகின்றன.



உலகம் முழுவதும் கிரிக்கெட் ரசிகர்களால் மிகவும் எதிர்பார்க்கப்படும் போட்டி 50 ஓவர் உலகக்கோப்பை போட்டி. இந்த முறை இந்த போட்டி இந்தியாவில் நடைபெறும் நிலையில் எதிர்பார்ப்பு இன்னும் கூடியுள்ளது. மொத்தம் 10 நாடுகளை சேர்ந்த அணிகள் விளையாடும் இந்த போட்டிகளுக்கான 8 அணிகள் தகுதி பட்டியல் அடிப்படையில் தேர்வாகியுள்ள நிலையில் மீதமுள்ள கடைசி 2 இடங்களுக்கான தகுதி போட்டிகள் நடைபெற உள்ளன.

இன்று ஜிம்பாப்வேயில் தொடங்கும் இந்த தகுதி சுற்று போட்டிகளில் கடைசி 2 இடங்களுக்குள் நுழைய ஜிம்பாப்வே, வெஸ்ட் இண்டீஸ், இலங்கை, நேபாளம் உள்ளிட்ட 10 நாட்டு அணிகள் மோதிக் கொள்கின்றன. கடைசி 2 இடங்களை பிடித்து உலகக்கோப்பை போட்டிகளுக்குள் நுழைய போகும் அணி எது என்பது குறித்த பெரும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

Edit by Prasanth.K