வியாழன், 26 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By Siva
Last Updated : செவ்வாய், 23 மே 2023 (08:17 IST)

இன்று சேப்பாக்கம் மைதானத்தில் முதல் குவாலிஃபையர்.. இறுதிக்கு செல்லுமா சிஎஸ்கே?

ஐபிஎல் கிரிக்கெட் போட்டி தற்போது இறுதி கட்டத்தை நெருங்கியுள்ள நிலையில் இன்று முதல் குவாலிபயர் போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் சென்னை மற்றும் குஜராத் அணிகளுக்கு இடையே நடைபெற உள்ளது. 
 
இதுவரை சென்னை - குஜராத் அணிகள் மூன்று முறை மோதியுள்ள நிலையில் மூன்று முறைகளிலும் குஜராத் அணி தான் வெற்றி பெற்றுள்ள நிலையில் இன்றைய போட்டியில் அதிரடியாக விளையாடிய சிஎஸ்கே வெற்றி பெறுமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும் 
 
இன்றைய போட்டியில் வெல்லும் அணி நேரடியாக இறுதிப் போட்டிக்கு செல்லும் என்பதால் இரு அணிகளும் இன்றைய போட்டியில் வெற்றி பெற தீவிரமாக முயற்சி செய்யும் என்பது குறிப்பிடத்தக்கது.
 
சென்னை அணியை பொருத்தவரை கான்வே, ருத்ராஜ், ஷிவம் துபே, ஜடேஜா, தோனி, அம்பத்தி ராயுடு ஆகிய பேட்ஸ்மேன்கள் அபாரமான பார்மில் உள்ளனர். அதேபோல் தீபக் சஹார், பத்திரனா, தேஷ்பாண்டே, மொயின் அலி, ஜடேஜா ஆகிய பந்துவீச்சாளர்கள் நல்ல பார்மில் உள்ளனர். 
 
எனவே இன்றைய போட்டி சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறுவதால் ஆடியன்ஸ் ஆதரவும் இருக்கும் என்பதால் சென்னை அணி வெற்றி பெற வேண்டும் என்பதே அனைவரது விருப்பமாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 
Edited by Siva