திங்கள், 23 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By Mahendran
Last Modified: திங்கள், 20 நவம்பர் 2023 (12:39 IST)

உலகக்கோப்பை தொடரில் சிறப்பாக விளையாடிய 6 இந்திய வீரர்கள்: ஐசிசி அறிவிப்பு..!

Icc World cup 2023
நடந்து முடிந்த உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் கலந்து கொண்ட பத்து அணியிலும் சிறப்பாக விளையாடிய வீரர்கள் குறித்த பட்டியலை ஐசிசி அறிவித்துள்ளது.  
 
இதில் இந்திய வீரர்களான ரோகித் சர்மா, விராத் கோலி, கேஎல் ராகுல், ஜடேஜா, பும்ரா மற்றும் ஷமி ஆகிய ஆறு பேர் இடம் பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது
 
நடந்து முடிந்த 50 ஓவர் உலக கோப்பை தொடரில் சிறப்பாக விளையாடிய 12 வீரர்களை உள்ளடக்கிய அணியை ஐசிசி சற்றுமுன் அறிவித்துள்ளது. அதில் ரோஹித் ஷர்மாவை கேப்டனாக கொண்ட இந்திய அணியில் விராட் கோலி, கே.எல்.ராகுல், ஜடேஜா, பும்ரா, முகமது ஷமி என இந்திய வீரர்கள் மட்டும் 6 பேர் இடம் பிடித்துள்ளனர்.
 
மேலும் ஆஸ்திரேலியாவில் இருந்து மேக்ஸ்வெல், ஆடம் ஜாம்பா, தென்னாப்பிரிக்காவில் இருந்து குயிண்டன் டி காக், ஜெரால்ட் கோட்ஸீ, நியூசிலாந்தில் இருந்து டேரில் மிட்செல், இலங்கையில் இருந்து தில்ஷன் மதுஷங்க ஆகியோர் இடம் பிடித்துள்ளனர்.
 
Edited by Mahendran