வியாழன், 23 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Siva
Last Updated : திங்கள், 20 நவம்பர் 2023 (08:12 IST)

வெற்றியோ தோல்வியோ, உங்களை நாங்கள் நேசிக்கிறோம்: ராகுல் காந்தி

வெற்றியா தோல்வியா இந்திய அணியை நாங்கள் நேசிக்கிறோம்  என காங்கிரஸ் கட்சியின் எம்பி ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கிடையே நேற்று நடைபெற்ற  உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியின் இறுதி போட்டியில் ஆஸ்திரேலிய அணி வெற்றி பெற்றது.

கோடிக்கணக்கான இந்திய கிரிக்கெட் ரசிகர்களின் கனவு தகர்ந்ததை அடுத்து இந்திய அணிக்கு பலர் ஆறுதல் தெரிவித்து வருகின்றனர். மோடி உள்பட பலர் இந்திய அணிக்கு துணை நிற்போம் என்று தெரிவித்த நிலையில் தற்போது காங்கிரஸ் கட்சியின் ராகுல் காந்தியும் ஆறுதல் தெரிவித்துள்ளார்.  

இந்திய அணி வீரர்களை நீங்கள் போட்டியில் சிறப்பாக விளையாடினார்கள். வெற்றியோ அல்லது தோல்வியோ நாங்கள் உங்களை நேசிக்கிறோம் அடுத்து வருவதை வெல்வோம் என்று கூறினார். மேலும் உலக கோப்பை வெற்றிக்கு தகுதியான ஆஸ்திரேலிய அணிக்கு எனது வாழ்த்துக்கள் என்றும் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

Edited by Siva