1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Siva
Last Updated : திங்கள், 20 நவம்பர் 2023 (11:02 IST)

கிரிக்கெட்டில் இந்திய அணி தோல்வி: சாப்ட்வேர் இன்ஜினியர் மாரடைப்பில் மரணம்

உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்திய அணி நேற்று தோல்வி அடைந்த நிலையில் சாப்ட்வேர் இன்ஜினியர் ஒருவர் போட்டியை பார்த்துக் கொண்டிருந்த நிலையில்  அதிர்ச்சியில் மாரடைப்பால் மரணம் அடைந்ததாக தகவல் வெளியாகியுள்ளன. 
 
 உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் இறுதிப்போட்டியில் நேற்று அகமதாபாத் மைதானத்தில் இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே நடைபெற்றது.  இந்த போட்டியில் ஆரம்பம் முதலில் ஆஸ்திரேலியா கை ஓங்கி இருந்தது என்பதும் 240 என்ற மிகக் குறைந்த ரன்கள் எடுத்த இந்திய அணி ஆஸ்திரேலிய விக்கெட்டுகளையும் எடுக்க தவறிவிட்டது. இதனை அடுத்து 6 விக்கெட்டுக்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா அணி அபார வெற்றி கோப்பையை கைப்பற்றியது. 
 
இந்த போட்டியை பார்த்துக் கொண்டிருந்த கோடிக்கணக்கான இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் இதனால் அதிர்ச்சி அடைந்தனர். இந்த நிலையில் உலக கோப்பையில் இந்திய அணியின் தோல்வியை தாங்கிக் கொள்ள முடியாமல் திருப்பதி அருகே சாஃப்ட்வேர் இன்ஜினியர் ஜோதி குமார் என்பவர் அதிர்ச்சியில் உயிர் இழந்தார். இதனால் அவரது குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்
 
Edited by Siva