வியாழன், 26 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By
Last Modified: செவ்வாய், 15 அக்டோபர் 2019 (18:27 IST)

சூப்பர் ஓவர் முறையில் அதிரடி மாற்றம் – ஐசிசி அறிவிப்பு !

சூப்பர் ஓவர் முறையில் இனி வெற்றிக் கிடைக்கும் வரை மீண்டும் மீண்டும் ஓவர்கள் வீசப்படும் என ஐசிசி அறிவித்துள்ளது.

சமீபத்தில் நடந்து முடிந்த இங்கிலாந்து, நியுசிலாந்து அணிகளுக்கு இடையிலான உலகக்கோப்பை இறுதிப்போட்டி சமனில் முடிந்தது. இதையடுத்து வீசப்பட்ட சூப்பர் ஓவரும் சமனில் முடிய அதிக பவுண்டரிகள் அடித்த அணியான இங்கிலாந்து வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. இது கிரிக்கெட் உலகில் பல சர்ச்சைகளைக் கிளப்பியது. முன்னாள் வீரர்கள் மற்றும் விமர்சகர்கள் ஐசிசி-யின் இந்த முடிவுக்கு எதிர்ப்புத் தெரிவித்தனர்.

இந்நிலையில் இன்று துபாயில் நேற்று நடந்த சர்வதேச கிரிக்கெட் கவுன்சில்  கூட்டத்தில் சூப்பர் ஓவர் விதிமுறையில் மாற்றம் கொண்டுவந்துள்ளது. அந்த கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின் படி ‘இனி ஐசிசி நடத்தும் போட்டிகளில் போட்டி சமனில் முடிந்தால் முடிவு கிடைக்கும் வரை சூப்பர் ஓவர் வீசப்படும். பவுண்டரிகளின் அடிப்படையில் முடிவு எடுக்கப்படாது. அதே சமயம் லீக் போட்டிகள் சமனில் முடிந்தால் அது டையாகவே கருதப்படும்’ எனத் தெரிவித்துள்ளார்.