1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: செவ்வாய், 15 அக்டோபர் 2019 (08:17 IST)

சீமானின் சர்ச்சை பேச்சு குறித்து இந்த மூன்று பேர்களும் வாயை திறக்காதது ஏன்?

முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி படுகொலை குறித்து சமீபத்தில் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் சர்ச்சைக்குரிய ஒரு கருத்தை தெரிவித்த நிலையில், இந்த கருத்து பெரும் பரபரப்பை ஏற்பட்டுள்ளது 
 
சீமான் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என காங்கிரஸ் கட்சி குரல் கொடுத்து வருகிறது. சீமான் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர் 
 
இந்த நிலையில் சீமானின் சர்ச்சை பேச்சு குறித்து தான் நேற்று அனைத்து ஊடகங்களிலும் விவாதங்கள் நடந்தன. காங்கிரஸ், மதிமுக, நாம் தமிழர் கட்சியைச் சேர்ந்தவர்கள் இந்த விவாதத்தில் கலந்து கொண்டார்கள்,
 
இருப்பினும் நாட்டையே பரபரப்பாக்கி இருக்கும் சீமானின் சர்ச்சை பேச்சு குறித்து இதுவரை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ பன்னீர்செல்வம் மற்றும் திமுக தலைவர் மு க ஸ்டாலின் ஆகிய மூவரும் இதுவரை கருத்து சொல்லவில்லை என்பது குறிப்பிடத்தக்கது
 
இதுகுறித்து நெட்டிசன்கள் பேஸ்புக், டுவிட்டர் மூலம் கேள்வி எழுப்பு வருகின்றனர். அனைத்து விஷயங்களுக்கும் உடனுக்குடன் கருத்து தெரிவித்து கேள்வி எழுப்பும் திமுக தலைவர் மு க ஸ்டாலின், சீமானின் இந்த சர்ச்சை கருத்து குறித்து எந்தவித கேள்வியும் எழுப்பாமல் இருப்பது ஏன்? என்று நெட்டிசன்கள் கேள்வி எழுப்பியுள்ளனர். அதிலும் தன்னுடைய கூட்டணி கட்சியின் முன்னாள் தலைவரும் இருந்த ஒருவரின் படுகொலை குறித்த சர்ச்சை பேச்சுக்கு கண்டனம் தெரிவிக்காமல் அமைதி காப்பது ஏன் என்ற கேள்வி அனைவர் மனதிலும் எழுகின்றது
 
அதேபோல் முன்னாள் பிரதமர் ஒருவரின் படுகொலை குறித்த சர்ச்சை பேச்சை இன்றைய முதல்வரும் துணை முதல்வரும் கண்டிக்காதது ஏன் என்ற கேள்வியையும் நெட்டிசன்கள் எழுப்பியுள்ளனர். இனிமேலாவது இந்த மூவரும் இந்த சர்ச்சை பேச்சு குறித்து கருத்து தெரிவிப்பார்களா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்