வியாழன், 9 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By sinojkiyan
Last Modified: திங்கள், 14 அக்டோபர் 2019 (14:44 IST)

’அரசுப்பேருந்தில் மதத்தின் படம்’ : தமிழகத்தில் வெடித்த சர்ச்சை

நம் நாடு மதச்சார்பற்ற நாடு என்பது அனைவருக்கும் தெரியும் .அதனால்  அரசு  அலுவலகங்கள் , அரசு சார்ந்த விழாக்களில் பொதுச்சொத்துகளில்  மதத்தைப் பிரதிபலிக்கும் எந்தப் புகைப்படம் இடம் பெறக் கூடாது என்பது விதி. இந்நிலையில் அரசுப் பேருந்து ஒன்றில் இந்து மதத்தின் படம் இடம்பெற்றுள்ளது சர்ச்சையைக் கிளப்பி உள்ளது.
தமிழகத்தை காவி மயமாக்க வேண்டுமென பாஜக கட்சி கங்கணம் கட்டிக் கொண்டு வருகின்றனர். இந்த சமயத்தில் TN.01 AN. 1339 என்ற பதிவு எண் கொண்ட  அரசுப் பேருந்தில் ஒன்றில் ஆஞ்சநேயர் புகைப்படம் இடம் பெற்றுள்ள சம்பவம் அதிமுக அரசுக்கு பெரும் சங்கடத்தை ஏற்படுத்தியுள்ளது.
 
இதுகுறித்து சமூக வலைதளங்களில் கடுமையாக விமர்சனம் செய்து வருகின்றனர் நெட்டிசன்கள். ஜெய் ஹனுமான் என்ற என்று எழுதப்பட்டுள்ள இந்த குளிர்சாதன பேருந்தின் கண்ணாடியை போக்குவரத்து அதிகாரிகள்,நடத்துநர், ஓடுநர் என யாரும்  பார்க்கவில்லையா என பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.