நானும் மனுஷன் தான்: ஆதங்கத்தை கொட்டிய தோனி!!

dhoni
Sugapriya Prakash| Last Modified வியாழன், 17 அக்டோபர் 2019 (15:41 IST)
எல்லோரையும் போல் நானும் ஒரு மனிதன் தான், எனக்கும் கோபம் வரும் என மனம் திறந்து பேசியுள்ளார் தோனி. 
 
தோனி சமீபத்தில் தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் கலந்துக்கொண்டார். அப்போது அவர் தனது கோபத்தை பற்றி பேசினார். தோனி கூறியதாவது, 
 
எல்லோரையும் போல் நானும் ஒரு மனிதன் தான். எனக்கும் கோபம் வரும். ஆனால் நான் கோபத்தை கட்டுப்படுத்துவதால் அது வெளியே தெரிவதில்லை. கோபம் மட்டுமின்றி வெறுப்பும் ஏற்படும். ஆனால் அவற்றில் இருந்து விரைவில் மீண்டுவிடுவேன். 
dhoni
நான் ஒரு பிரச்சனையை ஆராய்வதைவிட அதற்கான தீர்வை தேடவே நினைப்பேன். இதுவே என் உணர்ச்சிகளை கட்டுப்படுத்துவதற்கான வழியாக கருதுகிறேன் என தெரிவித்துள்ளார். 
 
உலகக்கோப்பை தொடருக்கு பின்னர் எந்த போட்டிலும் விளையாடாமல் இருந்து வரும் தோனி இரண்டு மாதம் ராணுவ பயிற்சி மேற்கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது. அனைவரும் தோனியின் ஓய்வு குறித்து கேள்வி எழுப்ப, அதற்கும் அவர் தனது உணர்ச்சியை காட்டிக்கொள்ளாமல் கூலாக இருக்கிறார். 


இதில் மேலும் படிக்கவும் :