செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By
Last Updated : புதன், 17 நவம்பர் 2021 (15:57 IST)

ஹர்பஜன் சிங் தேர்வு செய்துள்ள ஐசிசி கனவு அணி!

நடந்து முடிந்துள்ள உலகக்கோப்பை டி 20 தொடரின் கனவு அணியை ஹர்பஜன் சிங் அறிவித்துள்ளார்.

நடந்து முடிந்த டி 20 உலகக்கோப்பை தொடர் எதிர்பாராத பல திருப்பங்களுடன் நடந்து முடிந்து, எதிர்பாராத விதமாக ஆஸ்திரேலியா கோப்பையை வென்று பலரின் கணிப்புகளை தவிடுபொடியாக்கியுள்ளது. இந்நிலையில் இந்த தொடரில் சிறப்பாக செயல்பட்ட வீரர்களைக் கொண்டு சிறந்த அணியை ஐசிசி வெளியிட்டுள்ளது. இதில் அதிர்ச்சி என்னவென்றால் அந்த கனவு அணியில் ஒரு இந்திய வீரர் கூட இல்லை. அந்த அணிக்கு பாகிஸ்தான் அணியின் கேப்டன் பாபர் ஆசம் நியமிக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில் இந்திய முன்னாள் வீரர் ஹர்பஜன் சிங் தன்னுடைய கனவு அணியை அறிவித்துள்ளார். அதில் இரண்டு இந்திய வீரர்களுக்கு இடமளித்துள்ளார்.

ஹர்பஜனின் அணி:-
முகமது ரிஸ்வான், டேவிட் வார்னர், கேன் வில்லியம்சன், பட்லர், ஏய்டன் மார்க்ரம், வனிந்து ஹசரங்கா, ஆசிப் அலி, ரவீந்தர ஜடேஜா, ஷஹீன் அஃப்ரிடி, போல்ட், பும்ரா