செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: புதன், 17 நவம்பர் 2021 (10:41 IST)

விஜய் சேதுபதியை இயக்குகிறாரா ஹெச் வினோத்?

ஹெச் வினோத் நடிகர் விஜய் சேதுபதிக்கு கதை சொல்லி அவரின் சம்மதம் பெற்றுள்ளதாக சொல்லப்படுகிறது.

மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள படம் அஜித்குமார் நடிப்பில் உருவாகி வரும் வலிமை. இப்படத்தை ஹெச்.வினோத் இயக்கி வருகிறார். இப்படத்தை மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூர் தயாரிக்கிறார். இந்த படத்தின் ரிலீஸ் மற்றும் இறுதிக்கட்ட வேலைகள் தற்போது நடைபெற்று வருகின்றன. பொங்கல் பண்டிகைக்கு இந்த படம் பிரம்மாண்டமாக ரிலிஸ் ஆகவுள்ளது.

இதையடுத்து அஜித்தின் அடுத்த படத்தையும் ஹெச் வினோத்தே இயக்கவும், போனி கபூர் தயாரிக்கவும் உள்ளார். இந்த படத்துக்கான வேலையை இப்போது ஹெச் வினோத் செய்து வருகிறார். இதற்கிடையில் அவர் விஜய் சேதுபதியை சந்தித்து அவருக்கு ஒரு கதையை சொல்லி அவரிடம் சம்மதமும் வாங்கிவிட்டாராம். அஜித் படத்தை முடித்ததும் அடுத்தது உடனடியாக இந்த படம் தொடங்கப்படலாம் என சொல்லப்படுகிறது.