ஞாயிறு, 29 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Updated : புதன், 17 நவம்பர் 2021 (10:47 IST)

எதிர்பாலினத்தவர்கள் மசாஜ் செய்யக்கூடாது… நகராட்சி நிர்வாகம் அறிவிப்பு!

கவுகாத்தி முனிசிபல் கார்ப்பரேஷ்ன் முறைகேடுகளை குறைப்பதற்காக இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

அஸ்ஸாமில் உள்ள கவுகாத்தி நகரில் ஸ்பா மற்றும் மசாஜ் செண்டர்களில் பல முறைகேடுகள் நடப்பதாக புகார்கள் வந்துள்ளதாகவும், அதைத் தடுக்க அவற்றுக்கு சில வழிமுறைகளை வெளியிட்டுள்ளது முனிசிபல் கார்ப்பரேஷன். அதன் படி பார்லர்களில் தனி அறைகள் மற்றும் பிரத்யேக அறைகள் இருக்கக் கூடாது எனவும் அதுபோலவே ஆண்களுக்கு பெண்களோ அல்லது பெண்களுக்கு ஆண்களோ மசாஜ் செய்யக்கூடாது எனவும் முனிசிபல் கார்ப்பரேஷனின் ஆணையர் தேவாஷிஷ் சர்மா கையெழுத்திட்ட அறிக்கை வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.