1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
  4. Corona cases in India increases

மீண்டும் உயர்ந்த தினசரி பாதிப்பு: இந்திய கொரோனா நிலவரம்!

கொரோனா
இந்தியாவில் கடந்த சில வாரங்களில் கொரோனா பாதிப்புகள் வேகமாக குறைந்து வருகின்றது.

 
கொரோனா பாதிப்புகள் காரணமாக இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் ஊரடங்கு தீவிரப்படுத்தப்பட்டு வந்தது. இந்நிலையில் தற்போது தினசரி பாதிப்புகள் மெல்ல குறைய தொடங்கியுள்ளது. முன்னதாக 30 ஆயிரத்திற்கும் அதிகமாக இருந்த பாதிப்புகள் சமீபகாலமாக 20 ஆயிரத்திற்கு கீழ் குறைந்துள்ளது. 
 
தற்போதைய நிலவரப்படி கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 10,197 பேர் பாதித்துள்ளனர். இதன் மூலம், மொத்த பாதிப்பு எண்ணிக்கை 3,44,66,598 ஆக உயர்ந்தது. அதோடு புதிதாக 301 பேர் இறந்துள்ளனர். இதனால், நாட்டின் மொத்த உயிரிழந்தோர் எண்ணிக்கை 4,64,153 ஆக உயர்ந்தது.
 
கொரோனா தொற்றில் இருந்து ஒரே நாளில் 12,134 பேர் குணமடைந்துள்ளனர். இதனால் குணமடைந்தோர் எண்ணிக்கை 3,38,73,890 ஆக உயர்ந்துள்ளது. இந்தியாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 1,28,555 பேருக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்படுகிறது.
 
இந்தியாவில் 1,13,68,79,685 பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. நேற்று ஒரே நாளில் 67,82,042 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
About Writer
Sugapriya Prakash
அடுத்த கட்டுரையில்
ஏவுகணை மோதி வெடித்த சாட்டிலைட்! – ஆபத்தில் சர்வதேச விண்வெளி நிலையம்?