செவ்வாய், 2 ஜூலை 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: புதன், 17 நவம்பர் 2021 (10:17 IST)

மீண்டும் தள்ளிப்போகும் வாடிவாசல்… ரசிகர்களுக்கு ஏமாற்றம்!

சூர்யா நடிப்பில் வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாக இருந்த வாடிவாசல் அடுத்த ஆண்டு மே மாதத்துக்கு தள்ளிப்போக உள்ளது.

சூர்யாவின் சூரரைப் போற்று  திரைப்படத்துக்குப் பிறகு அவர் வெற்றி மாறன் இயக்கத்தில் தாணு தயாரிப்பில் வாடிவாசல் படத்தில் நடிப்பார் என சொல்லப்பட்டது. அந்த படத்துக்கான போஸ்டர் கூட வெளியானது. ஆனால் இப்போது சூர்யாவின் அடுத்த படத்தை இயக்குனர் பாண்டிராஜ் இயக்க உள்ளார். அதற்கடுத்தும் சில படங்களில் நடிக்க கமிட் ஆகி வருகிறார். அதே போல வெற்றிமாறனும் சூரி மற்றும் விஜய் சேதுபதி நடிப்பில் விடுதலை என்ற படத்தை இயக்கி வருகிறார்.

இருவரும் தங்கள் படங்களை முடித்த பிறகு வாடிவாசல் இந்த ஆண்டு இறுதியில் தொடங்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் சூர்யா பாலா மற்றும் சிறுத்தை சிவா ஆகியோரின் படங்களை இயக்கிய பின்னரே வாடிவாசல் படப்பிடிப்பில் கலந்து கொள்கிறாராம். அதற்கு அடுத்த ஆண்டு மே மாதம் ஆகிவிடும் என சொல்லப்படுகிறது.