புதன், 25 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By
Last Modified: வியாழன், 4 ஏப்ரல் 2019 (06:46 IST)

தோல்விகள் இல்லையென்றால் அவன் வீரனே இல்லை. ஹர்பஜன்சிங் ஆறுதல்

ஐபிஎல் கிரிக்கெட் போட்டி ஆரம்பிக்கும் முன்னரே தனது டுவிட்டர் பக்கத்தில் தமிழில் டுவீட் போட்டு அசத்தி வரும் ஹர்பஜன்சிங், கடந்த மூன்று போட்டிகளில் சிஎஸ்கே அணி வெற்றி பெற்றவுடன் ஆவேசமான டுவீட்டுக்களை பதிவு செய்தார். குறிப்பாக ராஜஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் வெற்றி பெற்ற பின்னர் 'சூப்பர் டீலக்ஸ்' படத்தின் டிரைலரில் விஜய்சேதுபதி வசனம் பேசுவது போன்ற டுவீட் ஒன்றை பதிவு செய்து அனைவரையும் அசத்தினார்
 
இந்த நிலையில் நேற்று மும்பை அணிக்கு எதிரான போட்டியில் சிஎஸ்கே அணி தோல்வி அடைந்த நிலையில் ரசிகர்களுக்கு ஆறுதல் கூறும் வகையில் ஒரு டுவீட்டை ஹர்பஜன்சிங் பதிவு செய்துள்ளார். அதில், 'அடி பட்ட சிங்கத்தோட மூச்சு காத்து அதோட கர்ஜனையை விட பயங்கரமா இருக்கும்.உலகில் தோல்விகள் காணாத வீரனே இல்லை, தோல்விகள் இல்லையென்றால் அவன் வீரனே இல்லை.மோதி எழுவோம் நாங்கள்,தமிழே வெரும் கைதட்டலை மட்டும் தாங்கள். "தோல்வியின்றி வரலாறா" என்று கூறியுள்ளார்.
 
ஆனால் ஏற்கனவே தோல்வியால் அதிருப்தியில் இருக்கும் ரசிகர்கள் ஹர்பஜனின் இந்த டுவீட்டை ரசித்தது போல் தெரியவில்லை. மாறாக ஹர்பஜன்சிங்கை கலாய்த்து கமெண்ட்டுக்களை பதிவு செய்து வருகின்றனர். ஏற்கனவே ஹர்பஜன்சிங்கை ரசிகர்கள் 'திருவள்ளுவர்' என்ற பட்டப்பெயரை வைத்து கலாய்த்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது