வியாழன், 9 ஜனவரி 2025
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By
Last Updated : சனி, 28 ஜூலை 2018 (18:02 IST)

நான் அப்படி செய்திருக்க கூடாது; ஆனாலும் செய்தேன்: மனம் திறந்த கங்குலி

2002ஆம் ஆண்டு நாட்வெஸ்ட் தொடரை இந்திய அணி வென்றபோது அப்போதைய இந்திய அணியின் கேப்டன் கங்குலி சட்டையை கழற்று சுற்றியதற்கு வருத்தம் தெரிவித்துள்ளார்.

 
2002ஆம் ஆண்டு இந்திய அணி நாட்வெஸ்ட் தொடரில் வென்றது. இதை அப்போதைய இந்திய அணியின் கேப்டன் சவுரவ் கங்குலி தனது சட்டையை கழற்றி சுற்றினார். கங்குலி என்றாலே முதலில் நினைவு வருவது அவரது தைரியமான நடவடிக்கைகள்தான். அதில் ஒன்று கங்குலி சட்டையை கழற்றி சுற்றியது.
 
இந்திய கிரிக்கெட் வரலாற்றில் கங்குலிக்கு ஒரு இடம் என்றால் அதேபோல் அவர் சட்டையை கழற்றி சுற்றிய நிகழ்வும் வரலாறுதான். தற்போது இதுகுறித்து கங்குலி நிகழ்ச்சி ஒன்றில் பேசு இருக்கிறார். அதில் அவர் கூறியதாவது:-
 
நான் வலது பக்கம் நின்றிருந்தேன். விவிஎஸ் லக்‌ஷ்மன் எனது இடதுபுறமும், ஹர்பஜன் எனது பின்புறமும் நின்றுக்கொண்டு இருந்தேன். நான் சட்டையை கழற்றி சுற்றியபோது, விவிஎஸ் லக்‌ஷ்மன் என்னை அப்படி செய்ய வேண்டாம் என சொல்ல முயன்றார். நான் முடித்த பின் ஹர்பஜன் நான் என்ன செய்ய என்று கேட்டார். நீயும் சட்டையை கழற்று என்றேன்.
 
அந்த நேரத்தில் எனக்கு தோன்றியது, இந்தியாவில் இங்கிலாந்து அணி தொடரை சமன் செய்தபோது பிளின்டாப் சட்டையை கழற்றி கொண்டாடினார். அதேபோன்று நான் ஏன் கொண்டாடக்கூடாது என்று எண்ணினேன்.
 
இதுபற்றி என் மகள் ஒருமுறை ஏன் அப்படி செய்தீர்கள்? கிரிக்கெட்டில் இதுபோன்று செய்ய வேண்டுமா? என்று கேட்டார். இல்லை ஒருமுறை நான் தவறுதலாக இப்படி செய்துவிட்டேன் என்று கூறினேன் என்று தெரிவித்துள்ளார்.
 
மேலும் விராட் கோஹ்லி தலைமையில் இந்திய அணி சாதிக்கும் என நம்புவதாக அவர் கூறினார்.