வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By siva
Last Updated : வியாழன், 19 ஆகஸ்ட் 2021 (07:23 IST)

ஜப்பானில் நடைபெறவிருந்த ஃபார்முலா ஒன் கார் பந்தயம் ரத்து!

ஜப்பானில் நடைபெறவிருந்த ஃபார்முலா ஒன் கார் பந்தயம் ரத்து!
ஜப்பானில் சமீபத்தில் ஒலிம்பிக் போட்டிகள் முடிவடைந்த நிலையில் அக்டோபர் மாதம் பார்முலா1 கார்பந்தயம் நடைபெறவிருந்த நிலையில் அந்த போட்டி ரத்து செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது 
 
ஜப்பான் நாட்டில் தற்போது நாளுக்கு நாள் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து வருகிறது குறிப்பாக ஒலிம்பிக் போட்டிகளுக்கு பின்னர் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதாக கூறப்படுகிறது 
 
இது நிலையில் அக்டோபர் 10ஆம் தேதி நடைபெற இருந்த பார்முலா1 கார்பந்தயம் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் அதே நேரத்தில் அடுத்த வாரம் நடைபெற இருக்கும் பாரா ஒலிம்பிக் போட்டிகள் திட்டமிட்டபடி நடக்கும் என்று கூறப்படுகிறது 
 
ஜப்பான் நாட்டில் குறிப்பாக டோக்கியோவில் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து வருவதாகவும் ஒரு சில இடங்களில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளன. கொரோனா வைரஸ் கட்டுப்படுத்தப்படும் வரை வேறு விளையாட்டுப்போட்டிகள் எதுவும் ஜப்பானில் நடைபெறாது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது