திங்கள், 23 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By mahendran
Last Modified: புதன், 18 ஆகஸ்ட் 2021 (17:06 IST)

சீதை வேடத்தில் நடிப்பதற்கு அதிக சம்பளம் கேட்பதா? கரீனா கபூரை விமர்சிக்கும் நெட்டிசன்கள்!

இந்தி சினிமாவின் முன்னணி நடிகைகளில் ஒருவர் கரீனா கபூர். இவர் நடிகர் சாயிப் அலிகானை திருமணம் செய்துகொண்டார்.

திருமணத்துக்கு பின்னர் சில ஆண்டுகள் சினிமாவில் இருந்து ஓய்வு எடுத்துக் கொண்ட அவர் குழந்தைகள் பிறந்த பின்னர் மீண்டும் நடிக்க வந்தார். ஆனால் எதிர்பார்த்ததை விட அப்போதும் அவருக்கான வாய்ப்புகள் அதிகமாகவே வந்தன. கிட்டத்தட்ட 8 கோடி ரூபாய் வரை அவர் சம்பளம் பெற்று வந்தார். இந்நிலையில் இப்போது தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் ராமாயணத்தை அடியொற்றி ஒரு 3டி படம் உருவாகி வருகிறது. அதில் சீதையாக நடிக்க அவர் 12 கோடி ரூபாய் கேட்டுள்ளாராம். தயாரிப்பாளர்களும் அந்த தொகைக்கு சம்மதம் தெரிவித்துள்ளனராம்.

இந்நிலையில் சீதை வேடத்தில் நடிக்க அதிக சம்பளம் கேட்டு புனிதத்தன்மையை கரீனா கபூர் கெடுத்து விட்டதாக நெட்டிசன்கள் குற்றம் சாட்ட ஆரம்பித்துள்ளனர்.