செவ்வாய், 7 ஜனவரி 2025
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By sivalingam
Last Modified: புதன், 2 அக்டோபர் 2019 (08:52 IST)

ரோஹித் ஓப்பனிங், அஸ்வின் எண்ட்ரி: முதல் டெஸ்ட்டில் இந்திய அணியின் விபரங்கள்

தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து ஏற்கனவே டி20 மற்றும் ஒருநாள் கிரிக்கெட் போட்டி தொடரில் விளையாடி முடித்த நிலையில், இன்று டெஸ்ட் தொடரில் விளையாட உள்ளது 
 
 
விசாகப்பட்டினத்தில் இன்று காலை ஒன்பது முப்பது மணிக்கு தொடங்க உள்ள முதல் டெஸ்ட் போட்டியில் இரு அணிகளும் மோதவுள்ளன. இந்த நிலையில் இந்திய அணியில் விளையாடும் அணி வீரர்கள் பற்றிய அறிவிப்பு சற்றுமுன் வெளியாகியுள்ளது 
 
முதல் டெஸ்ட் போட்டியில் ரோகித் சர்மா விளையாடுவாரா? மாட்டாரா? என்ற கேள்வி எழுந்த நிலையில் அவருடைய பெயர் அணியின் பட்டியலில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இதனை அடுத்து ரோகித் சர்மாவும் மயாங்க் அகர்வாலும் ஓபனிங் பேட்ஸ்மேன்களாக களமிறங்கவுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் அணியில் சுழற்பந்து வீச்சாளர் அஸ்வின் இணைக்கப்பட்டு உள்ளார் என்பதும் ஒரு குறிப்பிடத்தக்க அம்சமாகும் 
 
 
இந்திய அணியின் வீரர்கள் விபரம் பின்வருமாறு: ரோஹித் சர்மா, மயாங்க் அகர்வால், புஜாரே, விராத் கோஹ்லி, ரஹானே, விஹாரி, சஹா, ஜடேஜா, அஸ்வின், இஷாந்த் ஷர்மா, ஷமி ஆகியோர் முதல் டெஸ்ட்டில் விளையாடவுள்ளனர்.
 
இதேபோல் தென்னாப்பிரிக்க அணியிலும் ஒரு சில அதிரடி மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. தென் ஆப்பிரிக்க அணி வீரர்களின் விபரம் பின்வருமாறு: டூபிளஸ்சிஸ், புரூன், எல்கர், டீகாக், பவுமா, க்ளாசன், மார்க்கம், ஹம்சா, மஹாராஜ், முத்துசாமி, பியடிட், நார்ட்ஜி, நிகிடி, ஃபிலந்தர் ஆகியோர் இன்று களமிறங்கவுள்ளனர்,
 
 
இன்று டாஸ் வெல்பவர் முதலில் பேட்டிங்கை தேர்வு செய்வார்கள்என்று கணிக்கப்படுகிறது. ஏனெனில் விசாகப்பட்டினம் மைதானம் பேட்ஸ்மேன்களுக்கு சாதகமாக இருக்கும் என்று கூறப்படுகிறது