1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By sivalingam
Last Modified: செவ்வாய், 1 அக்டோபர் 2019 (08:16 IST)

முதல் டெஸ்ட் போட்டி நாளை தொடக்கம்: வெற்றியுடன் தொடங்குமா இந்தியா?

தென் ஆப்பிரிக்கா கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து இந்திய கிரிக்கெட் அணி உடன் விளையாடி வரும் நிலையில், ஏற்கனவே ஒருநாள் மற்றும் டி20 தொடர்கள் முடிவடைந்துவிட்டன 
 
 
இந்த நிலையில் நாளை இரு அணிகளுக்கும் இடையே முதலாவது டெஸ்ட் போட்டி விசாகப்பட்டினத்தில் தொடங்க உள்ளது. இந்த போட்டி பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய நிலையில் முதல் வெற்றியை பெறும் அணி எந்த அணியை இருக்கும் என்பது குறித்த எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது 
 
 
இந்திய அணியில் விராட் கோலி, ரஹானே, மயங்க் அகர்வால், ஜடேஜா, ரிஷப் பண்ட், கேஎல் ராகுல், புஜாரா, ரோகித் சர்மா ஆகிய முன்னணி பேட்ஸ்மேன்கள் உள்ளனர். அதேபோல் ஷமி, சஹா, இஷாந்த் சர்மா ஆகிய முன்னணி பந்துவீச்சாளர்களும் உள்ளனர். விக்கெட் கீப்பராக ரிஷப் பண்ட்அசத்தி வருவதால் இந்திய அணிக்கு வலுவான நிலையில் உள்ளது கிடைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது 
 
 
அதேபோல் தென்னாபிரிக்க அணியில் டூபிளஸ்சிஸ், டீகாக், டீன் எல்கர், பவமா, மார்க்கம் போன்ற பேட்ஸ்மேன்களும், ரபடா, நார்ட்ஜி, ஹம்ஜா, கேசவ் மகாராஜ் போன்ற பந்துவீச்சாளர்களும் ஃபார்மில் இருப்பதால் இரு அணியும் சம வலிமையில் இருப்பதாக கருதப்படுகிறது