1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Modified: சனி, 4 ஏப்ரல் 2020 (08:07 IST)

ஏப்ரல் 15 ல் விமான சேவை தொடங்குமா? அமைச்சர் விளக்கம்!

ஏப்ரல் 15 ஆம் தேதியோடு ஊரடங்கு உத்தரவு முடியும் நிலையில் விமானப் போக்குவரத்து தொடங்குமா என்ற கேள்விக்கு சிவில் விமான போக்குவரத்துத் துறை  அமைச்சர் விளக்கம் அளித்துள்ளார்.

இந்தியா முழுவதும் ஏப்ரல் 14ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு இருக்கும் நிலையில் ஏப்ரல் 15ஆம் தேதி முதல் ரயில்கள் மற்றும் விமானங்களுக்கு முன்பதிவு சில தினங்களுக்கு முன்னர் தொடங்கி இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது. ஆனால் ஊரடங்கு உத்தரவு ஏப்ரல் 14 ஆம் தேதிக்கு பிறகும் நீட்டிக்கப்படலாம் என சொல்லப்படுகிறது. இதனால் விமானப் போக்குவரத்து ஏப்ரல் 15 ஆம் தேதி சாத்தியமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

இந்நிலையில் இது குறித்து சிவில் விமானப் போக்குவரத்து துறை அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி அளித்துள்ள நேர்காணலில் ‘ஊரடங்கு முடிந்த பின்னர் விமானப் போக்குவரத்தைத் தொடங்கலாமா என்று அரசு இன்னும் முடிவு எடுக்க வில்லை. அப்போதைய சூழ்நிலையைக் கணக்கில் கொண்டு முடிவுகள் எடுக்கப்படலாம். ஆனால் முழுவதுமாக விமான சேவை தொடங்கப் படாவிட்டாலும் குறைந்த அளவிலாவது தொடங்கப்படும்’ என அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.