திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Modified: சனி, 4 ஏப்ரல் 2020 (08:04 IST)

ஏப்ரல் 15 முதல் முன்பதிவு தொடக்க்கமா? ஏர் இந்தியா விளக்கம்

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக இந்தியாவிலும் கடந்த சில நாட்களாக ஊரடங்கு உத்தரவு அமலில் இருந்துவருகிறது. இந்த நிலையில் இந்த ஊரடங்கு உத்தரவு ஏப்ரல் 14ம் தேதியுடன் முடிவடைகிறது. இதனை அடுத்து ஒரு சில தனியார் விமான நிறுவனங்களும் இந்திய ரயில்வேயும் ஏப்ரல் 15 முதல் முன்பதிவை தொடங்க இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது 
 
ஏற்கனவே இந்தியன் ரயில்வே ஏப்ரல் 15 முதல் தொலைதூர பயணங்களுக்கான முன்பதிவை தொடங்கி விட்டன என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் ஏர் இந்தியா நிறுவனம் ஏப்ரல் 15 முதல் முன்பதிவை தொடங்க போவதில்லை என சற்றுமுன் அறிவித்துள்ளது
 
ஏப்ரல் 30ஆம் தேதி வரை ஏர் இந்தியா விமான சேவை நிறுத்தப்பட்டுள்ளதாகவும், உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சேவையை தொடங்குவது குறித்து ஏப்ரல் 30ஆம் தேதிக்கு பின்னர் இந்திய அரசு கூறும் அறிவுரையை பொறுத்தே முன்பதிவை தொடங்குவது குறித்து முடிவு செய்யப்படும் என்றும் ஏர் இந்தியா நிறுவனம் அறிவித்துள்ளது. இருப்பினும் ஏப்ரல் 15 முதல் ஒருசில தனியார் விமானங்கள் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு விமான சேவைகளை தொடங்க இருப்பதாக செய்திகள் வெளிவந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இதனையடுத்து வெளிநாடு மற்றும் வெளிமாநிலங்களில் சிக்கியிருப்பவர்கள் தனியார் விமான சேவையை பயன்படுத்த தயாராகி வருகின்றனர்.