திங்கள், 23 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By Sinoj
Last Modified: வியாழன், 7 ஜனவரி 2021 (22:30 IST)

பிரபல கால்பந்து வீரர் மாரடைப்பால் மரணம் !

பிரேசில் நாட்டைச் சேர்ந்த கால்பந்து வீரர் அலெக்ஸ் அபோலினரியோ இன்று மைதானத்தில் மாரடைப்பு ஏற்பட்டு காலமானார்.

பிரேசில் நாட்டைச் சேர்ந்த கால்பந்து வீரர் அலெக்ஸ் அபோலினரியோ. இவர் மிகத் திறமையான வீரர் ஆவார்.

இவர் தற்போது கிளப் அணிக்கான விளையாடி வருகிறார். இந்நிலையில் வழக்கம் போல் இன்று மைதானத்தில் விளையாடிக்கொண்டிருக்கும்போது, அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டு திடீர் மரணமடைந்தார்.

அவரது இறப்பு சக விளையாட்டுவீரர்களுக்கும், ரசிகர்களுக்கும்  அந்நாட்டு மக்களுக்குடன் ஒட்டு மொத்த மக்களுக்கும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தனது திறமையின் மூலம் தேசிய அணில் இடம்பிடித்திருந்த அலெக்ச் அபொலினரியோவுக்கு வயது 24 ஆகும்.

நான்கு நாட்களுகு முன் போர்ச்சுக்கலில் நடந்த எஃப்சி அல்வெர்கா கிளப்புக்காக  விளையாடிக் கொண்டிருந்தார். அப்போது யுனியா டியோ அல்மிரென் கிளப்புக்கு எதிராக விளையாடும்போது,மயங்கி விழுந்தார். மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர் தற்போது சிகிச்சை பலனின்றி இறந்தார்.