1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By siva
Last Updated : புதன், 9 டிசம்பர் 2020 (07:32 IST)

நாட்டு மக்கள் அனைவருக்கும் கொரனோ தடுப்பூசி இலவசம்: பிரேசில் அதிபர் அறிவிப்பு

கொரோனா வைரசால் பாதிக்கப்பட்ட நாடுகளில் மூன்றாவது இடத்தில் உள்ளது பிரேசில் என்பது தெரிந்ததே 
 
அமெரிக்கா இந்தியாவை அடுத்து மூன்றாவது இடத்தில் உள்ள பிரேசில் தற்போது சீரிய நடவடிக்கைகளின் மூலம் கொரோனா வைரஸை கட்டுப்படுத்தி வருகிறது. இந்த நிலையில் கொரோனா வைரஸ் தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டு அது பொதுமக்களின் பயன்பாட்டிற்கு வந்த பிறகு நாட்டில் உள்ள அனைத்து மக்களுக்கும் தடுப்பூசி இலவசமாக போடப்படும் என்று அந்நாட்டு அதிபர் தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்
 
ஏற்கனவே இங்கிலாந்து நாட்டில் பொது மக்களுக்கு தடுப்பூசி போடும் பணி தொடங்கி விட்டதை அடுத்து பிரேசில் நாட்டிலும் தடுப்பூசிக்கு அனுமதி வழங்கப்படும் அனைத்து மக்களுக்கும் அந்த தடுப்பூசி போடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது
 
பிரேசில் நாட்டில் கொரோனாவால் பாதிப்பு அடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 6,675,915 என்பதும், அந்நாட்டில் பலியானோர் எண்ணிக்கை 178,184 என்பதும் குணமானோர் எண்ணிக்கை 5,854,709 என்பதும் குறிப்பிடத்தக்கது.