இந்திய பெண்களுடன் தவறான உறவு: இம்ரான் கான் குறித்து 2வது மனைவி அதிர்ச்சி தகவல்!

Last Updated: சனி, 14 ஜூலை 2018 (17:00 IST)
பாகிஸ்தானின் பிரபல கிரிக்கெட் வீரரான இம்ரான் கான் விளையாட்டில் இருந்து ஓய்வுபெற்ற பின், தனியாக அரசியல் கட்சியை தொடங்கி, தீவிர அரசியலில் ஈடுபட்டு வருகிறார். 
 
இந்நிலையில் இவரது இரண்டாவது மனைவி தனது சுயசரிதை புத்தகத்தில் வெளியிட்டு உள்ளார். அதில், இம்ரான் கான் மீதான பல்வேறு குற்றச்சாட்டுகளை அம்பலப்படுத்தியுள்ளார். 
 
இம்ரான் கான் ஒரு ஓரினச்சேர்க்கையாளர், குடும்ப வாழ்க்கையின் விதிமுறைகள் புரியாத நபர், பெண்களை மதிக்க தெரியாதவர். அவருக்கு தெரிந்ததெல்லாம் செக்ஸ், தவறான உறவு, போதை மருந்து பழக்கம், நடனம் ஆடுவது மட்டும்தான். 
 
முறையாக திருமணம் செய்யும் முன்பாகவே முறைகேடான வழியில் இம்ரான் கானுக்கு 5 குழந்தைகள் பிறந்துள்ளன என்றும் ரெஹம் கான் கூறியுள்ளார். 
 
மேலும், அவரோடு முறைகேடான உறவு வைத்திருந்த பெண்களில் சிலர் இந்தியாவை சேர்ந்தவர்கள் என்றும் தனது புத்தகத்தில் தெரிவித்துள்ளார்.
 
பாகிஸ்தானின் தேர்தலுக்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில் தேர்தலில் போட்டியிடும் இம்ராம் கான் குறித்த இந்த புத்தகம் பெருமளவில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. 


இதில் மேலும் படிக்கவும் :