திருமண கோஷ்டியினர் சென்ற வேன் விபத்து - 18 பேர் பலி

troop
Last Modified திங்கள், 16 ஜூலை 2018 (13:15 IST)
பாகிஸ்தானில் திருமணத்திற்கு சென்று திரும்பிய, திருமண கோஷ்டியினரின் பேருந்து விபத்துக்குள்ளானதில் 18 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.
பாகிஸ்தானின் சிந்து மாகாணத்தை சேர்ந்த சுமார் 50 பேர் சந்ராந்த் நகரில் நடைபெற்ற திருமண நிகழ்ச்சியில் பங்கேற்று விட்டு அதிகாலையில் பேருந்தில் ஊர் திரும்பிக்கொண்டிருந்தனர். 
 
அப்போது திடீரென பேருந்தின் டயர் பஞ்சர் ஆனதால் சாலையோரம் வாகனத்தை பேருந்தை நிறுத்தி டயர் மாற்றிக்கொண்டிருந்தனர். இரவு நேரம் என்பதால் பேருந்தில் இருந்தவர்கள் அயர்ந்து தூங்கிக் கொண்டிருந்தனர். அப்போது பின்னால் அதிவேகமாக வந்த லாரி, நின்று கொண்டிருந்த பேருந்தின் மீது பயங்கரமாக மோதியது.
 
இந்த கோர விபத்தில் சிக்கி 18 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். படுகாயமடைந்த மீதமுள்ளவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். அதில் பலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளதால் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக் கூடும்.
rescue
வாகன ஓட்டிகளின் அலட்சியமே இவ்வாறான விபத்துக்கள் நடைபெற காரணம் என பொதுமக்கள் குற்றம் சாட்டுயுள்ளனர்.


இதில் மேலும் படிக்கவும் :