ஐபிஎல் நட்பெல்லாம் இங்கு செல்லாது: பட்லர் திட்டவட்டம்!

Last Updated: திங்கள், 30 ஜூலை 2018 (17:10 IST)
இந்திய அணி இங்கிலாந்தில் சுற்றுபயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. வரும் ஆகஸ்டு 1 ஆம் தேதி 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் துவங்குகிறது. 
இந்நிலையில், டெஸ்ட் போட்டி குறித்து இங்கிலாந்து வீரர் பட்லர் பின்வருமாறு தெரிவித்துள்ளார். சில இந்திய வீரர்களுடன் ஆடியுள்ளேன். ஆனால் களத்தில் அவை மறக்கப்படும். அனைவரும் போட்டி மனப்பான்மையுடன்தான் ஆடுவார்கள். 
 
பழகிய முகங்கள் இருக்கலாம், கிரிக்கெட்டை விடவும் கூடுதலாக சிலருடன் பழகியிருக்கலாம், இது நடப்பு கிரிக்கெட் உலகின் மிகப்பெரிய விஷயமே. ஆனால் களத்தில் நட்பு இல்லை. பயிற்சி நாட்கள், உணவு மேஜை என்று நட்பு இருக்கலாம். 
 
என் முதல் சதத்தை எடுக்க ஆவலோடு இந்தியா - இங்கிலாந்து டெஸ்ட் தொடருக்காக காத்திருக்கிறேன் என பட்லர் கூறியுள்ளார். 


இதில் மேலும் படிக்கவும் :