தொடர்புடைய செய்திகள்
- அஜித்தின் லேட்டஸ்ட் புகைப்படம்… இணையத்தில் வைரல்!
- தொடர்ந்து 40 ஆயிரத்திற்கும் மேல் தினசரி பாதிப்புகள் – இந்தியாவில் கொரோனா நிலவரம்!
- ஜப்பானில் டெல்டா வேரியண்ட்; டோக்கியோவில் அவசரநிலை! – ஒலிம்பிக் போட்டி என்னவாகும்?
- 18.63 கோடியை தாண்டியது உலக கொரோனா பாதிப்பு!
- தமிழகத்தின் 6 முக்கிய நகரங்களில் இன்றைய கொரோனா பாதிப்பு!
பாகிஸ்தான் அணியைப் பந்தாடிய இங்கிலாந்து பி டீம்!
இங்கிலாந்து மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையே நடந்த முதல் ஒருநாள் போட்டியில் இங்கிலாந்து அணி அபார வெற்றி பெற்றுள்ளது.
இங்கிலாந்து வீரர்கள் 7 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்ட நிலையில் பாகிஸ்தான் அணிக்கு எதிரான ஒருநாள் தொடருக்கு பென் ஸ்டோக்ஸ் தலைமையிலான புதிய அணி அறிவிக்கப்பட்டது. கிட்டத்தட்ட இது இங்கிலாந்து பி டீம் போன்றது. ஆனால் அந்த அணியே பாகிஸ்தானை பந்தாடியுள்ளது.
நேற்று கார்டிப் போட்டியில் டாஸ் வென்ற பென் ஸ்டோக்ஸ் பந்துவீச முடிவு செய்தார். ஆனால் பாகிஸ்தானுக்கு அதிர்ச்சியளிக்கும் விதமாக பவுலர்கள் சிறப்பாக பந்துவீசி 141 ரன்களுக்கு பாகிஸ்தான் சுருண்டது. இதையடுத்து களமிறங்கிய இங்கிலாந்து அணி 1 விக்கெட் இழப்புக்கு 142 ரன்கள் சேர்த்து எளிதாக வெற்றி பெற்றது.
