அஜித்தின் லேட்டஸ்ட் புகைப்படம்… இணையத்தில் வைரல்!
நடிகர் அஜித் சமீபத்தைய புகைப்படம் இணையத்தில் வெளியாகி கவனத்தை பெற்றுள்ளது.
நேர்கொண்ட பார்வை வெற்றிக்குப் பின்னர் அஜித் இப்போது வலிமை படத்தில் போலிஸ் அதிகாரியாக நடித்து வருகிறார். இந்த படத்துக்கு அஜித்தின் ஆஸ்தான இசையமைப்பாளரான யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு கோரோனா லாக்டவுனால் தடைபட்டு மீண்டும் தொடங்கி 90 சதவீதம் வரை முடிந்துள்ளது. கொரோனா பரவல் காரணமாக மீதமுள்ள படப்பிடிப்பை நடத்துவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் விரைவில் அடுத்த கட்ட படப்பிடிப்பு நடக்க உள்ளதாக சொல்லப்படுகிறது. இந்நிலையில் அஜித்தின் சமீபத்தைய புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகி கவனத்தை ஈர்த்துள்ளது.