1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By
Last Modified: சனி, 15 பிப்ரவரி 2020 (08:46 IST)

கடைசி 2 பந்துகளில் 2 விக்கெட்டுக்கள்: இங்கிலாந்து த்ரில் வெற்றி!

கடைசி 2 பந்துகளில் 2 விக்கெட்டுக்கள்
இங்கிலாந்து மற்றும் தென் ஆப்பிரிக்க நாடுகளுக்கு இடையிலான 2-வது டி20 போட்டி நேற்று டர்பன் நகரில் நடைபெற்றது. இந்த போட்டியில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்க அணி முதலில் பந்து வீச முடிவு செய்தது. இதனை அடுத்து களமிறங்கிய இங்கிலாந்து அணி 20 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்து 204 ரன்கள் எடுத்தது. ஸ்டோக்ஸ் 47 ரன்களும், ஜேஜே ராய் 40 ரன்களும் எடுத்தனர் என்பது குறிப்பிடத்தக்கது 
 
இந்த நிலையில் 205 ரன்கள் என்ற இலக்கை நோக்கி இங்கிலாந்து அணி விளையாடி வந்தது. அந்த அணி கடைசி ஓவரில் 15 ரன்கள் எடுக்க வேண்டும் என்ற நிலையில் இருந்தது. முதல் பந்தில் ரன் ஏதும் இல்லை என்றாலும் இரண்டாவது மற்றும் மூன்றாவது பந்தில் சிக்ஸர் மற்றும் பவுண்டரி அடித்ததால் ஆட்டம் பரபரப்பானது. 3 பந்துகளில் 5 ரன்கள் தேவை என்ற நிலையில் நான்காவது பந்தில் 2 ரன்கள் அடித்து விட்டதால் 2 பந்துகளில் 3 ரன்கள் தென் ஆப்பிரிக்க அணியில் வெற்றிக்கு தேவைப்பட்டது. இதனால் தென்னாப்பிரிக்கா வெற்றி பெற்று விடும் என்றே கருதப்பட்டது
 
ஆனால் அபாரமாக பந்துவீசிய குர்ரான் கடைசி 2 பந்துகளில் 2 விக்கெட்டை வீழ்த்தி இங்கிலாந்து திரில் வெற்றி பெற வைக்க உதவினார். இதனையடுத்து இங்கிலாந்து அணி 2 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த போட்டியில் மிகச் சிறப்பாக விளையாடிய எம்.எம்.அலி ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது