டெஸ்ட் போட்டிகளில் இங்கிலாந்து அணி புதிய சாதனை !

Last Modified சனி, 25 ஜனவரி 2020 (08:01 IST)
டெஸ்ட் போட்டிகளில் இங்கிலாந்து அணி 5 லட்சம் ரன்களைக் கடந்து புதிய சாதனையைப் படைத்துள்ளது.

கிரிக்கெட்டின் பிறப்பிடமான இங்கிலாந்து அணி புதிய மைல்கல் சாதனை ஒன்றை நிகழ்த்தியுள்ளது. இங்கிலாந்தில் 1739 முதல் கிரிக்கெட் போட்டிகள் நடத்தப்பட்டு வருகின்றன. சர்வதேசப் போட்டிகள் 1877 ஆம் ஆண்டு முதல் நடந்து வருகின்றன. இதுவரை 13 அணிகள் டெஸ்ட் போட்டிகள் விளையாடும் தகுதியைப் பெற்றுள்ளன.

ஆனால் எல்லா அணிகளுக்கும் சீனியர் அணியாக இங்கிலாந்து உள்ளது. இதுவரை 1022 போட்டிகளில் விளையாடியுள்ள இங்கிலாந்து அணி 5 லட்சம் ரன்கள் என்ற மைல்கல்லை கடந்துள்ளது. அதற்கடுத்த இடத்தில் ஆஸ்திரேலியா 830 போட்டிகளிலும் மூன்றாவது இடத்தில் இந்தியா 520 போட்டிகளிலும் விளையாடியுள்ளது குறிப்பிடத்தக்கது.


இதில் மேலும் படிக்கவும் :