1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By
Last Modified: புதன், 15 ஜனவரி 2020 (20:11 IST)

அரச குடும்பத்தில் இருந்து விலகிய ஹாரிக்கு வேலை கொடுக்க முன்வந்த ஓட்டல்!

இங்கிலாந்து அரச குடும்பத்தில் இருந்து விலகுவதாக சமீபத்தில் இளவரசர் ஹாரி அறிவித்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது என்பது தெரிந்ததே. இந்த நிலையி ஹாரிக்கு பகுதிநேர வேலை கொடுக்க தயார் என பிரபல ஓட்டல் நிறுவனமான பர்கர் கிங் என்ற நிறுவனம் தனது சமூக வலைத்தளத்தில் தெரிவித்துள்ளது. ஆனால் இந்த பதிவுக்கு கடும் கண்டனங்கள் எழுந்துள்ளன.
 
இங்கிலாந்து இளவரசர் ஹாரி மற்றும் அவரது மனைவி மேகன் அரசு பதவிகளில் இருந்து விலகி தனித்து வாழ விரும்புவதாக சமீபத்தில் அறிவித்தனர். இந்த நிலையில் அமெரிக்காவை தலைமையிடமாக கொண்ட பர்கர் கிங் என்ற உணவு நிறுவனம் தனது டுவிட்டரில் ஒரு டுவீட்டை பதிவு செய்துள்ளது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது
 
அதில், ”இளவரசர் ஹாரி அரச பதவியை துறக்காமல் வேலை தேடலாம் என்றும், அப்படி வேலை தேடும்பட்சத்தில் அவருக்காக புதிய மகுடம் ஒன்று தயாராக உள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளது.