வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: ஞாயிறு, 19 ஜனவரி 2020 (12:56 IST)

இளவரசர் பதவியை துறந்த ஹாரி! – அரச குடும்பம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

அரச குடும்பத்தின் பதவியிலிருந்து விலகப்போவதாக இளவரசர் ஹாரி அறிவித்த நிலையில் அவர் வெளியேறியதை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது பக்கிங்காம் அரண்மனை.

லண்டன் ராஜ வம்சத்தை சேர்ந்த இளவரசர் ஹாரி நடிகையான மேகனை காதலித்து மணந்து கொண்டார். ஆனால் மேகனை ராஜ குடும்பத்தினர் கேவலமாக நடத்தியதாக கூறப்படுகிறது. தனது காதலுக்காக ராஜ பதவியையே புறம்தள்ள ஹாரி முடிவெடுத்துவிட்டதாக சமூக வலைதளங்களில் பேசிக் கொள்ளப்பட்டது.

தான் வெளியேற போவதாக இளவரசர் சார்லஸ் – மேகன் தம்பதி அறிவித்திருந்த நிலையில் ராணி தலைமையில் ஆலோசனை கூட்டம் நடத்தப்பட்டது. அதிலும் ஹாரி தனக்கு ராஜ்ஜியமோ, ராஜ்ஜிய சொத்துகளோ, பதவிகளோ வேண்டாம் என மறுத்து விட்டிருக்கிறார்.

இந்நிலையில் தற்போது பக்கிங்காம் அரண்மனை வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பில் இளவரசர் ஹாரி தனது ராஜ பதவியை துறந்து விட்டதாகவும், இனி அவர் இளவரசர் என்ற பெயரால் அழைக்கப்பட மாட்டார் எனவும் கூறப்பட்டுள்ளது.

அரச பதவியை துறந்த ஹாரி தன் மனைவியோடு சாதாரண வாழ்க்கையை வாழ இருப்பதாக ஏற்கனவே அறிவித்திருந்தார். ஹாரியின் இந்த முடிவை மக்கள் பலர் வரவேற்றுள்ளனர்.