திங்கள், 23 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By vinoth
Last Updated : புதன், 9 நவம்பர் 2022 (17:03 IST)

திரில் வெற்றி பெற்ற பாகிஸ்தான்… இறுதிப் போட்டியில் எதிர்கொள்ள போவது யார்?

நியுசிலாந்து மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான அரையிறுதிப் போட்டியில் பாகிஸ்தான் அணி வென்றுள்ளது.

டி 20 உலகக்கோப்பை தொடரின் முதல் அரையிறுதி போட்டி இன்று பாகிஸ்தான் மற்றும் நியுசிலாந்து அணிகளுக்கு இடையே நடைபெற்றது. இதில்  நியூசிலாந்து அணி முதலில் பேட்டிங் செய்து 4 விக்கெட் இழப்பிற்கு 152 ரன்கள் எடுத்துள்ளது.

இதனை அடுத்து 153 என்ற இலக்கை நோக்கி விளையாடிய பாகிஸ்தான் அணியின் தொடக்க வீரர்களான பாபர் அசாம் மற்றும் முகமது ரிஸ்வான் ஆகிய இருவருமே அரைசதம் அடித்து அசத்தினர். இதனால் முதல் 10 ஓவர்கள் சிறப்பான அடித்தளத்தை அமைத்தது பாகிஸ்தான்.

பின்னர் தொடக்க ஆட்டக்காரர்கள் இருவரும அவுட் ஆனதும். லேசான தடுமாற்றம் நிலவியது. இதனால் போட்டி கடைசி ஓவர் வரை சென்றது. கடைசி ஓவரின் முதல் பந்தில் பாகிஸ்தான் அணி வெற்றி பெற்றது.

இதன் மூலம் பாகிஸ்தான் அணி பல ஆண்டுகளுக்குப் பிறகு டி 20 உலகக்கோப்பையின் இறுதிப் போட்டிக்கு சென்றுள்ளது.