வியாழன், 9 ஜனவரி 2025
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By Siva
Last Updated : ஞாயிறு, 4 ஜூன் 2023 (15:31 IST)

4 பந்துகளில் முடிந்தது மேட்ச்: பேட்டிங், பவுலிங், கீப்பிங் செய்யாமல் வெற்றி அடைந்த பென் ஸ்டோக்ஸ்..!

முதல்முறையாக டெஸ்ட் போட்டியில் ஒரு அணியின் கேப்டன் பேட்டிங் பௌலிங் மற்றும் விக்கெட் கீப்பிங் செய்யாமல் வெற்றி பெற்ற விசித்திர சாதனையை இங்கிலாந்து அணியின் ஸ்டோக்ஸ் பெற்றுள்ளார்.
 
இங்கிலாந்து மற்றும் அயர்லாந்து அணிகளுக்கு இடையே டெஸ்ட் போட்டி ஜூன் ஒன்றாம் தேதி தொடங்கியது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த அயர்லாந்து அணி முதலில் பேட்டிங் செய்து 172 ரன்கள் அடித்தது. இதனை அடுத்து முதலில் இங்கிலாந்து முதல் இன்னிங்ஸில் 524 ரன்கள் அடித்த நிலையில் டிக்ளர் செய்தது. 
 
இதனை அடுத்து இரண்டாவது இன்னிங்ஸ் விளையாடி அயர்ல்ந்து அணி 362 ரன்கள் அடித்ததால் 12 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலையில் இங்கிலாந்து அணி இரண்டாவது இன்னிங்ஸில் களமிறங்கியது. இரண்டாவது இன்னிங்ஸின் முதல் ஓவரில் நான்கு பந்துகளில் மூன்று பவுண்டரிகளை அடித்த இங்கிலாந்து பேட்ஸ்மேன் ஜாக்கிரெளலி ஆட்டத்தை முடித்து வைத்தார். 
 
இந்த போட்டியில் கேப்டனாக செயல்பட்ட ஸ்டோக்ஸ் இந்த டெஸ்ட் போட்டியில் பேட்டிங் பௌலிங் விக்கெட் கீப்பிங் என எதுவுமே செய்யாமல் தனது அணியை வெற்றி பெற செய்துள்ளார். இது ஒரு விசித்திர சாதனையாக கருதப்படுகிறது.
 
Edited by Siva