வியாழன், 23 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Sinoj
Last Modified: வெள்ளி, 26 மே 2023 (20:14 IST)

இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக் காரின் மீது மர்ம கார் மோதி விபத்து

rishi sunak
இங்கிலாந்து நாட்டு பிரதமர் ரிஷி சுனக் காரின் மீது மர்ம கார் ஒன்று மோதிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இங்கிலாந்து நாட்டில் பிரதமர் ரிஷி சுனக் தலைமையிலான ஆட்சி நடைபெற்று வருகிறது. இவர், இந்திய வம்சா வழியைச் சேர்ந்தவர் ஆவார்.  இவரது அதிகாரப்பூர்வ இல்லம் லண்டன்  நகரிலுள்ள  எண் -10 டவுணிங் என்ற பகுதியில் உள்ளது.

இங்கு, ஒயிட் ஹவுஸ் பகுதியில் 1 வது கேட் பகுதியில் பிரதமர் ரிஷி சுனக் தன் குடும்பத்தினரருடன் வசித்து வருகிறார்.

இந்த சம்பவ தினத்தன்று, பிரதமர் ரிஷி சுனக் கார் மீது மர்ம நபரின் கார் ஒன்று மோதியது. அப்போது, அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார், மர்ம நபரின் காரை பிடித்தனர்.

இந்த விபத்தில் யாருக்கும் காயம் எதுவும் ஏற்படவில்லை என்ற கூறப்படுகிறது. இவ்விபத்து தொடர்பபாக அப்பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை போலீஸார் சோதனை  செய்து வருகின்றனர்.

இவ்விபத்து தொடர்பாக 50வயதுள்ள ஒருவரை போலீஸார் கைது செய்து விசாரணை செய்து வருகின்றனர்.