வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By
Last Updated : செவ்வாய், 17 ஜூலை 2018 (14:01 IST)

இந்தியாவை வீழ்த்த வின்ஸை களமிறக்கும் இங்கிலாந்து!

இந்தியா - இங்கிலாந்து அணிகள் இடையேயான கடைசி ஒருநாள் போட்டியில் இங்கிலாந்து அணி ஜேம்ஸ் வின்ஸ் என்ற வீரரை களமிறக்குகிறது.

 
இந்திய அணி இங்கிலந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. டி20 தொடரை இந்திய அணி 2-1 என்ற புள்ளிக்கணக்கில் கைப்பற்றியது. தற்போது ஒருநாள் போட்டி தொடர் நடைபெற்று வருகிறது.
 
முதலாவது ஒருநாள் போட்டியில் வெற்றி பெற்ற இந்திய அணி இரண்டாவது ஒருநாள் போட்டியில் படுதோல்வி அடைந்தது. இன்று மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி நடைபெற உள்ளது. இரு அணிகளும் தலா ஒரு வெற்றியுடன் உள்ளது.
 
இன்று நடைபெறும் மூன்றாவது மற்றும் கடைசி பொட்டியில் வெற்று பெறும் அணி தொடரை கைப்பற்றும். இந்நிலையில் இங்கிலாந்து அணியின் தொடக்க வீரரான ஜேசன் ராய் காயம் காரணமாக இந்த போட்டியில் இருந்து விலகியுள்ளார்.
 
இரண்டு ஒருநாள் போட்டிகளிலும் இங்கிலாந்து அணிக்கு சிறப்பான தொடக்கத்தை ஏற்படுத்தி கொடுத்தவர் ராய். இதனால் ஜேம்ஸ் வின்ஸ் என்பவரை இங்கிலாந்து அணி தொடக்க வீரராக களமிறக்க முடிவு செய்துள்ளது.
 
ராய் காயம் காரணமாக விலகியதை அடுத்து அந்த இடத்திற்கு இரண்டு வீரர்களின் பெயர் பரிந்துரைக்கப்பட்டது. ஜேம்ஸ் வின்ஸ் மற்றும் சாம் பில்லிங்ஸ். இவர்களின் ஜேம்ஸ் வின்ஸ் இங்கிலாந்து லயன்ஸ் அணியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியதால் தற்போது வின்ஸ் ராய் இடத்தை நிரப்ப உள்ளார்.