ரூட் அபார சதம்: இந்தியாவுக்கு 323 ரன்கள் இலக்கு

Last Modified சனி, 14 ஜூலை 2018 (20:10 IST)
இந்தியா மற்றும் இங்கிலாந்து நாடுகளின் அணிகளுக்கு இடையிலான ஒருநாள் கிரிக்கெட் போட்டி தொடரில் முதல் ஒருநாள் போட்டியில் இந்தியா அபார வெற்றி பெற்ற நிலையில் இன்று இரு அணிகளுக்கு இடையிலான 2வது ஒருநாள் போட்டி நடைபெற்று வருகிறது.
இந்த போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பேட்டிங் செய்ய தொடங்கியது. இந்திய பந்துவீச்சாளர்களின் பந்துகளை இங்கிலாந்து பேட்ஸ்மேன்கள் அடித்து நொறுக்கினர். குறிப்பாக ரூட் அபாரமாக விளையாடி 113 ரன்கள் குவித்தார். மேலும் வில்லே 50 ரன்களும், கேப்டன் மோர்கன் 53 ரன்களும், ராய் 40 ரன்களும் குவித்தனர். இறுதியில் இங்கிலாந்து அணி 50 ஓவர்களில் 7 விக்கெட்டுக்களை இழந்து 322 ரன்கள் குவித்துள்ளது.
இந்திய பவுலர்களை பொருத்தவரையில் இன்று சோதனையான நாள் என்றே கூறவேண்டும். முதல் போட்டியில் 6 விக்கெட்டுக்களை வீழ்த்திய குல்தீப் யாதவ் இன்றைய போட்டியில் மூன்று விக்கெட்டுக்களை வீழ்த்தினாலும் அவர் வீசிய பத்து ஓவர்களில் 68 ரன்கள் அடிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் 323 ரன்கள் என்ற இலக்கை நோக்கி இந்தியா விளையாடி வருகிறது. சற்றுமுன் வரை இந்திய அணி 5 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 28 ரன்கள் எடுத்துள்ளது.


இதில் மேலும் படிக்கவும் :