தொடர்புடைய செய்திகள்
- கோலி இங்கிலாந்து கவுண்ட்டி கிரிக்கெட்டில் விளையாட வேண்டும்… சஞ்சய் மஞ்சரேக்கர் அறிவுரை!
- யுவ்ராஜ் சிங்கின் தந்தையா இது?... தோனியைப் பாராட்டி பேச்சு!
- கபில்தேவ்வை சுடுவதற்காக அவர் வீட்டுக்கே துப்பாக்கியோடு சென்றேன்… யுவ்ராஜ் சிங்கின் தந்தை பகிர்ந்த தகவல்!
- புற்றுநோயை வென்றவர் யுவ்ராஜ் சிங்… ஆனால் அவரை உடல்தகுதியைக் காரணம் காட்டி நீக்கினார்கள்.. கோலியை குற்றம்சாட்டும் உத்தப்பா!
- இந்திய அணிக்கு ஆலோசகராக நியமிக்கப்பட உள்ளாரா தோனி?
தோனியைப் போல விளையாடுகிறார் திலக் வர்மா… பாராட்டிய முன்னாள் வீரர்!
ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக சிறப்பாக விளையாடி கவனம் பெற்ற திலக் வர்மா, அதன் பின்னர் வெஸ்ட் இண்டீஸூக்கு எதிரான டி 20 போட்டியில் அறிமுகமாகி சிறப்பான பங்களிப்பைக் கொடுத்தார்.
அதன் பின்னர் தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் அவர் தொடர்ந்து டி 20 போட்டிகளில் கோலியின் இடத்தில் இறங்கி கோலி போலவே மிகச்சிறப்பாக ஆடிவருகிறார். சென்னையில் நடந்த இங்கிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் தனியாளாக விளையாடி இந்திய அணியைக் கடைசி ஓவரில் வெற்றி பெறவைத்தார்.
இந்நிலையில் திலக் வர்மாவின் இன்னிங்ஸ் பற்றி பேசியுள்ள முன்னாள் வீரரும் வர்ணனையாளருமான சஞ்சய் மஞ்சரேக்கர் “திலக் வர்மாவிடம் பயமோ பதற்றமோ இல்லை. கடைசி ஓவரில் சிறப்பாக செயல்பட்டு போட்டியை வெற்றிகரமாக முடித்துக் கொடுத்தார். தோனியிடம் இருக்கும் மன உறுதி திலக் வர்மாவிடமும் இருக்கிறது. அது என்னை பிரம்மிக்க வைக்கிறது” எனக் கூறியுள்ளார்.
அடுத்த கட்டுரையில்