செவ்வாய், 7 ஜனவரி 2025
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By
Last Modified: வெள்ளி, 1 ஏப்ரல் 2022 (10:55 IST)

மலிங்கா சாதனையை முறியடித்த டுவெய்ன் பிராவோ! CSK ரசிகர்கள் மகிழ்ச்சி!

சிஎஸ்கே அணியின் ஸ்டார் பிளேயர்களில் ஒருவரான டுவெய்ன் பிராவோ ஐபிஎல் தொடரில் அதிக விக்கெட் வீழ்த்திய வீரர் என்ற சாதனையைப் படைத்துள்ளார்.

சி எஸ் கே அணியின் முக்கிய ஆல்ரவுண்டரான டுவெய்ன் பிராவோ கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக ஐபிஎல் தொடரில் சி எஸ் கே அணிக்காக விளையாடி வருகிறார். இந்த ஆண்டு ஏலத்திலும் அவரை சி எஸ் கே அணி எடுத்தது. இந்நிலையில் நேற்றைய போட்டியில் அவர் முக்கியமான சாதனை ஒன்றை படைத்துள்ளார்.

இதுவரை 153 ஐபிஎல் போட்டிகளில் விளையாடியுள்ள அவர் 171 விக்கெட்களை எடுத்து ஐபிஎல் தொடரில் அதிக விக்கெட்கள் வீழ்த்திய வீரர் என்ற சாதனையைப் படைத்துள்ளார். இதற்கு முன்பாக மலிங்கா, 170 விக்கெட்கள் வீழ்த்தியிருந்தார். அந்த சாதனையை இப்போது பிராவோ முறியடித்துள்ளார்.