திங்கள், 23 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By
Last Modified: வெள்ளி, 1 ஏப்ரல் 2022 (10:48 IST)

நேற்றைய போட்டியில் மைல்கல் சாதனையை எட்டிய தோனி!

நேற்றைய சி எஸ் கே vs லக்னோ அணிக்கு எதிரான போட்டியில் தோனி முக்கியமான ஒரு சாதனையைக் கடந்துள்ளார்.

ஐபில் தொடரின் 15 வது சீசன் தற்போது இந்தியாவில் நடந்து வருகிறது. இந்தத் தொடரில் நடந்த முதல் போட்டியில் சென்னைகிங்ஸ் கொல்கத்தாவிடம் தோற்ற நிலையில் இன்று லக்னோவிடம்  2 வது முறையாகத் தோற்றது சென்னை அணி.  இந்த போட்டியில் பேட்டிங்கில் 6 பந்துகளில் 16 ரன்களை சேர்த்த கேப்டன் தோனி முக்கியமான ஒரு சாதனையை நிகழ்த்தியுள்ளார்.

நேற்றைய போட்டியில் அவர் டி 20 போட்டிகளில் 7000 ரன்கள் என்ற மைல்கல் சாதனையைக் கடந்தார். இதற்கு முன்பாக இந்திய வீரர்களில் கோலி, ரோஹித் தவான், உத்தப்பா ஆகியவர்கள் மட்டுமே இந்த சாதனையைக் கடந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.