செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: வெள்ளி, 1 ஏப்ரல் 2022 (10:25 IST)

கேம் ஆஃப் த்ரோன்ஸ் ரசிகர்களே செம்ம நியூஸ் வந்துருச்சி…. வெளியான ரிலீஸ் தேதி!

கேம் ஆஃப் த்ரோன்ஸ் சீரியலின் இரண்டாம் பாகமான ஹவுஸ் ஆஃப் ட்ராகன்ஸ் உருவாகி வருகிறது.

அமெரிக்க எழுத்தாளர் ஜார்ஜ் மார்ட்டினால் எழுதப்பட்ட பிரபல நாவலான எ சாங் ஆஃப் ஐஸ் அண்ட் சாங்-ஐ தொலைக்காட்சித் தொடருக்காக கேம் ஆஃப் த்ரோன்ஸ் என்ற பெயரில் சீரிஸாக எடுத்தனர். ஹெச் பி ஓ தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பான இந்த தொடர் தொலைக்காட்சி வரலாற்றில் அதிகப் பார்வையாளர்களை பெற்ற சீரிஸாக சாதனை படைத்தது.

மொத்த 8 சீசனாக ஒளிப்பரப்பான இந்த சீசன் கடந்த மாதத்தோடு முடிவடைந்தது. இந்நிலையில் இதன் முந்தையப் பாகம் உருவாகி வருவதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. கேம் ஆஃப் த்ரோன்ஸ் ஆரம்பிக்கும் போது ஒருப் புரட்சிக்குப் பின்னர் ஆட்சியமைத்த 7 சாம்ராஜ்யங்களுக்குள் எழும் அதிகார வெறியை மையமாக இருந்தது. ஆனால் இப்பொது உருவாகும் முந்தையப் பாகம் புரட்சிக்கு முந்தையக் காலத்தில் இருந்த 10 சாம்ராஜ்யங்களின் கதையைப் பேசும் எனக் கூறப்படுகிறது.

ஹவுஸ் ஆஃப் ட்ராகன்ஸ் என பெயர் வைக்கப்பட்டுள்ள இந்த சீரிஸின் ஷூட்டிங் தற்போது நடந்து வருகிறது. இதையடுத்து சில புகைப்படங்களை பகிர்ந்துள்ள படக்குழு இந்த சீரிஸ் ஆகஸ்ட் மாதம் 21 ஆம் தேதி முதல் HBO தொலைக்காட்சியில் வெளியாகும் என அறிவித்துள்ளது. அதுபோலவே டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டாரிலும் வெளியாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.