1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By
Last Modified: செவ்வாய், 21 டிசம்பர் 2021 (16:02 IST)

தீவிர பயிற்சியில் கோலி… அட்வைஸ் சொல்லும் டிராவிட்!

இந்திய டெஸ்ட் அணியின் கேப்டன் விராட் கோலி சமீபகாலமாக தனது பேட்டிங் திறனில் திணறி வருகிறார்.

இந்நிலையில் அவரிடம் இருந்து லிமிடெட் ஓவர் கேப்டன்ஷிப் பறிக்கப்பட்டுள்ளது அவரிடம் இருந்த கூடுதல் சுமையை இறக்கியுள்ளது. அதனால் அவர் பேட்டிங்கிலும் டெஸ்ட் அணியை வழிநடத்துவதிலும் கூடுதல் கவனத்தை செலுத்தலாம்.

வரும் 26 ஆம் தேதி தென் ஆப்பிரிக்காவில் இந்திய அணி மூன்று டெஸ்ட் கொண்ட தொடரில் விளையாட உள்ளது. இதற்காக தென் ஆப்பிரிக்கா சென்றுள்ள இந்திய அணி இப்போது தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகிறது. இந்நிலையில் கேப்டன் கோலிக்கு பேட்டிங்கில் ஆலோசனை வழங்கும் விதமாக டிராவிட் செயல்பட்டு வருகிறார். இது சம்மந்தமான புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி கவனத்தைப் பெற்றுள்ளன.