புதன், 25 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Modified: சனி, 18 டிசம்பர் 2021 (01:41 IST)

கோலியை எச்சரித்த முன்னாள் வீரர்! என்ன செய்யப் போகிறார் கோலி!

சமீபத்தில் நியூசிலாந்திற்கு எதிரான டெஸ்ட் தொடரை வென்ற இந்திய அணி அடுத்து தென்னாப்பிரிக்காவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளது.

இவ்விரு அணிகளுக்கு இடையேயான டெஸ்ட் போட்டில் வரும் டிசம்பர் 26 ஆம் தேதி நடைபெறவுள்ளது. இதில் ஒருநாள் தொடருக்கான கேப்டனாக ரோஹித் சர்மா நியமிக்கப்பட்டார். டெஸ்ட் போட்டியில் கேப்டனாக கோலி செயல்பட்டாலும் இது ரசிகர்களுக்கு அதிருப்தியை ஏற்படுத்தீயுள்ளது.

டி-20 உலகக் கோப்பை தொடரில் கேப்டன் விராட் கோலி சோபிக்காததும் கூட இதற்கான காரணமாக இருக்கலாம் எனக் கூறப்படும் நிலையில் தென்னாப்பிரிக தொடரில் இந்திய அணியை டெஸ்ட் தொடரில் வென்றாக வேண்டிய இக்கட்டான நிலையில் கோலி உள்ளதாக முன்னாள் பாகிஸ்தான் வீரர் கனேரியா கூறியுள்ளார்.