துபாயில் களமிறங்கும் நோவாக் ஜோகோவிக்..

Arun Prasath| Last Modified திங்கள், 24 பிப்ரவரி 2020 (18:14 IST)
செர்பிய டென்னிஸ் வீரர் நோவோக் ஜோகோவிக், இன்று நடைபெறவுள்ள போட்டியில் களமிறங்க தயாராக உள்ளார்.

செர்பியா நாட்டை சேர்ந்த டென்னிஸ் வீரர் உலகின் நம்பர் 1 பிளேயர் ஆவார். தற்போது துபாய் ட்யூடி ஃப்ரீ டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் களமிறங்க தயாராக உள்ளார்.

3 ஆண்டுகளுக்குப் பிறகு துபாயில் நடைபெறும் போட்டியில் விளையாடவுள்ளார் ஜோகோவிக். இது குறித்து அவர் பேசுகையில், “எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. நான் இந்த போட்டிகளை மிகச்சிறப்பாக தொடங்குவேன். நான் எனது குடும்பத்துடன் துபாய் வந்துள்ளேன். கிட்டத்தட்ட 3 ஆண்டுகளுக்கு பிறகு துபாயில் விளையாட உள்ளதால், கடந்தகாலத்தில் சிறப்பாக விளையாடியதை மறுபடியும் கொண்டுவருவதை நோக்கியுள்ளேன்” என கூறியுள்ளார்.

துனிசியாவைச் சேர்ந்த மேலேக் ஜஸ்ரியுடன் மோதவுள்ள நிலையில், “அவர் எனக்கு சிறந்த நண்பர், இந்த டூரில் அவர் என்னுடன் நட்பாக பழகி வருகிறார். எங்கள் இருவரையும் ஒருவருக்கு ஒருவர் நன்றாக தெரியும். 4 அல்லது 5 வருடங்களுக்கு முன்பு நாங்கள் இருவரும் இதே துபாயில் விளையாடியிருக்கிறோம்” என கூறுகிறார். ஜோகோவிக் மாரின் சிலிக்குடன் டபுள்ஸிலும் விளையாடவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.இதில் மேலும் படிக்கவும் :