இந்தியாவின் சிறந்த கேப்டன் தோனி; ஹிட்மேன் புகழாரம்

Mahendra Singh Dhoni
Arun Prasath| Last Updated: திங்கள், 3 பிப்ரவரி 2020 (16:37 IST)
மஹேந்திர சிங் தோனி

இந்தியா பார்த்ததில் தோனி ஒரு சிறந்த கேப்டன் என ஹிட்மேன் ரோஹித் சர்மா தெரிவித்துள்ளார்.

இந்திய அணியின் முன்னாள் கேப்டன் மஹேந்திர சிங் தோனி, உலகக் கோப்பை போட்டிகளுக்கு பிறகு எந்த போட்டிகளிலும் பங்கு பெறவில்லை. இடையில் அவர் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற போகிறார் என பலரும் கூறி வந்தனர். இந்நிலையில் மார்ச் மாதம் தொடங்கவுள்ள ஐபிஎல் போட்டிகளில் பங்கேற்கவுள்ளார்.

rohit sharmaRohit Sharma says is a best captain" width="740" />
ரோஹித் ஷர்மா

இந்நிலையில் நேர்காணல் ஒன்றில் பேசிய இந்திய கிரிக்கெட் அணி வீரர் ரோஹித் ஷர்மா, ”தோனி ஒரு கூல் கேப்டன் என அனைவருக்கும் தெரியும். அக்குணமே அவரை மைதானத்தில் சரியான முடிவுகளை எடுக்கவைக்கிறது” என கூறியுள்ளார்.

மேலும், “இளம் வீரர்கள் அழுத்தத்தில் இருக்கும் போது, அவர்களின் கழுத்தில் கையை போட்டுக்கொண்டு சரளமாக பேசுவார், சீனியர் இவ்வாறு பேசும்போது, இளம் வீரர்களுக்கு ஒரு உத்வேகம் வரும். இந்தியா பார்த்த சிறந்த கேப்டன் தோனி” எனவும் புகழ்ந்துள்ளார்.இதில் மேலும் படிக்கவும் :