1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By Siva
Last Updated : வியாழன், 25 மே 2023 (08:35 IST)

நடுவருடன் வாக்குவாதம்: இறுதிப்போட்டியில் விளையாட தோனிக்கு தடையா?

சென்னை மற்றும் குஜராத் அணிகளுக்கு இடையே நடைபெற்ற குவாலிபயர் 1 போட்டியில் விளையாடிய போது நடுவரிடம் தோனி வாக்குவாதம் செய்தார். பத்திரனாவை பந்து வீச நடுவர் அனுமதிக்காத நிலையில் அவர் நேரத்தை கடத்துவதற்காக நடுவரிடம் வாக்குவாதம் செய்ததாக கூறப்பட்டது. 
 
இந்த நிலையில் நடுவரிடம் வாக்குவாதம் செய்த தோனி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறப்பட்டு வருகிறது. அவ்வாறு நடவடிக்கை எடுத்தால் தோனி இறுதிப் போட்டியில் விளையாட தடை விதிக்கப்படலாம் என்று கூறப்படுவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 
 
ஒரு வீரர் ஓய்வு எடுக்க வெளியே சென்றால் எத்தனை நிமிடங்கள் அவர் ஓய்வு எடுத்தாரோ அத்தனை நிமிடங்கள் பில்டிங் செய்துவிட்ட பிறகு தான் பந்து வீச வேண்டும் என்பது விதி. அந்த வகையில் 9 நிமிடங்கல் ஓய்வு எடுத்து விட்டு மீண்டும் களத்திற்கு வந்த பத்திரனா 4 நிமிடங்கள் மட்டும் பில்டிங் செய்துவிட்டு பந்து வீசு அழைக்கப்பட்டதால் நடுவர்கள் மறுப்பு தெரிவித்தனர்
 
அப்போது அவர் நடுவரிடம் வாக்குவாதம் செய்து ஐந்து நிமிடங்களை கடத்திவிட்டு தற்போது ஒன்பது நிமிடங்கள் ஆகிவிட்டது என்று கூறியதால் பரபரப்பு ஏற்பட்டது. இதனால்  தோனி மீது நடவடிக்கை எடுக்கப்படுமா? அவ்வாறு நடவடிக்கை எடுக்கப்பட்டால் இறுதிப் போட்டிக்கு விளையாட தடை விதிக்கப்படுமா? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும் 
 
Edited by Siva