1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By Sinoj
Last Updated: வியாழன், 25 மே 2023 (14:43 IST)

ஐபிஎல் போட்டியில் இருந்து எப்போது ஓய்வு ? தோனியின் பதிலால் ரசிகர்கள் சோகம்

MS Dhoni
ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் இருந்து எப்போது ஓய்வு பெறப் போகிறீர்கள் என்ற கேள்விக்கு சென்னை அணியின் கேப்டன் தோனி கூறியுள்ள பதில் ரசிகர்களுக்கு சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஐபிஎல்-2023, 16 வது சீசன் இந்தியாவில் நடந்து வருகிறது.   மொத்தம் 10 அணிகள் விளையாடிய நிலையில், இப்போட்டி இறுதிக்கட்டத்தை நெருங்கியுள்ளது.

நேற்றைய பிளே ஆப் போட்டியில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி , குஜராத் அணியை வீழ்த்தியது.15 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற சென்னை அணி 10 வது முறையாகக இறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்றுள்ளது.

இதனைத்தொடர்ந்து  சென்னை அணியில் மீண்டும் உங்களைப் பார்க்க முடியுமா என்று கிரிக்கெட் வர்ணனையாளர் ஹர்சா போக்லே தோனியிடம் கேள்வி எழுப்பினார்.

இதற்கு தோனி,  ‘’நான் சென்னையில் மீண்டும் விளையாடுவேனா என்று கேட்கிறீர்கள் எனக்குத் தெரியவில்லை.  நான் இதுபற்றி முடிவெடுக்க இன்னும் 8-9 மாதங்கள் இருக்கின்றன. வரும் டிசம்பர் மாதம் மினி ஏலம் நடக்கவுள்ளது.  நமக்கு எதற்கு  இப்போதே அந்த தலைவலி?  நான் விளையாடுவேனோ அல்லது வெளியில் இருப்பேனோ ஆனால் நான் எப்போதும் சிஎஸ்கேவுடன் இருப்பேன். முடிவெடுக்க இன்னும் நேரம் உள்ளது ‘’என்று தெரிவித்துள்ளார்.