வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Sinoj
Last Modified: புதன், 24 மே 2023 (21:44 IST)

இம்ரான் கானின் கட்சியை தடை செய்ய அரசு திட்டம்!

இம்ரான் கானின் தெஹ்ரீக்  - இ  - இன்சாப் கட்சியை தடை செய்ய உள்ளதாக பாகிஸ்தான் நாட்டின் பாதுகாப்பு அமைச்சர் கூறியுள்ளார்.

பாகிஸ்தான் நாட்டில்,  கடந்த 9 ஆம் தேதி ஊழல் வழக்குத் தொடர்பாக முன்னாள் பிரதமர் இம்ரான் கானை நீதிமன்ற வளாகத்தில் வைத்து ரேஞ்சர் படையினர் கைது செய்தனர்.

இம்ரான் கான் கைது செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து அவரது கட்சியினர்( தெஹ்ரீக்  இ  இன்சாப்)  போராட்டம் நடத்தினர்.

இதில், வன்முறை வெடித்ததை அடுத்து, படைப்பிரிவு கமாண்டர் அலுவலகம், விமானப்படை தளம், பைசலாபாத்தில் இருக்கும் ஐஎஸ்ஐ அலுவலகம், ராவல்பிண்டியிலுள்ள ராணுவத் தலைமையகம் உள்ளிட்ட பலவற்றை அக்கட்சியினர் சேதப்படுத்தினர்.

இந்த வன்முறையில், 10 பேர் உயிரிழந்ததாக போலீஸார் கூறினர். இந்த நிலையில், அந்த நாட்டு பாதுகாப்பு அமைச்சர் கவாஜா ஆசிப் இன்று இஸ்லாமாபாத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தார்.

அப்போது அவர் கூறியதாவது:  ‘’நாட்டின் பொதுச்சொத்துகளை சேதப்படுத்திய தன் கட்சிக்காரர்களை கண்டிக்க இம்ரான்கான் தயங்குகிறார்.

அதனால், அவரது தெஹ்ரீக்- இ-இன்சாப் கட்சியை தடை செய்வது பற்றி அரசு பரிசீலனை செய்து வருகிறது. ஆனால், இதுபற்றி இறுதிமுடிவு எடுக்கப்படவில்லை. அக்கட்சியைத் தடை செய்ய அரசு தீர்மானித்தால், இத்தீர்மானம் பாராளுமன்றத்தின் ஒப்புதலுக்கு அனுப்பப்படும்’’ என்று தெரிவித்துள்ளார்.